அப்பா கள்ளக் காதலி மற்றும் மாமா அனைவரையும் Gatwick Airport வைத்து தூக்கிய பிரிட்டன் பொலிஸ்

உலகம்

 

சாரா என்ற வெறும் 10 வயது நிரம்பிய சிறுமி கொலை செய்யப்பட்ட வழங்கில், சந்தேகிக்கப்பட்டு வந்த சாராவின் அப்பா, அவரது கள்ளக் காதலி மற்றும் மாமனார் என்று 3 பேரையும், கட் விக் ஏர் போட்டில் வைத்து பொலிசார் கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த 1 மாதத்திற்கு முன்னதாக சாரா என்ற இந்த சிறுமியின் உடல் அவரது வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சாராவின் அப்பா அவரது கள்ளக் காதலி மற்றும் மாமா என மூவரும் தப்பி பாக்கிஸ்தான் சென்று விட்டார்கள். இருப்பினும் பிரித்தானியப் பொலிசார் விட்டபாடாக இல்லை. சர்வதேச அளவில் பெரும் விசாரணையை ஆரம்பித்தார்கள்.

இதனால் பாக்கிஸ்தான் பொலிசார் இந்த மூன்றுபேரயும் தேடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனை அடுத்து பாக்கிஸ் தானில் மாட்டிக் கொண்டால், சர்சை என அறிந்த இந்த மூவரும், மீண்டும் பிரிட்டன் வர தீர்மானித்து, கட்விக் வந்தவேளை, குருவியை அமுக்குவதுபோல பொலிசார் அமுக்கி பிடித்துள்ளார்கள். மேலும் பல விசாரணைகள் இடம்பெற உள்ளது. பாக்கிஸ்தானில் இருந்து டுபாய்க்கு டிக்கெட்டை புக் செய்து. டுபாயில் இருந்து பிரிட்டன் வந்தால் தங்களை எவராலும் கண்டு பிடிக்க முடியாது என்று இந்த 3 பேரும் நினைத்தது முட்டாள் தனமான விடையம்.

பிரித்தானிய பொலிசாரை குறைவாக மதிப்பிட்ட இவர்கள் தற்சமயம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்கள். இவர்களே சாராவைக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்ற நபர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது ஒரு ஆணவக் கொலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

sara detha uk

Leave a Reply