கடந்த வாரம் தான் நடிகர் விஜயின் மகன், ஜேசன் விஜயை லைக்கா நிறுவனம் அணுகி பட வாய்ப்பு ஒன்றைக் கொடுத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஊடகங்களில் இந்தச் செய்தி தலைப்புச் செய்தியாக மாறியது. இதேவேளை நடிகர் விஜயின் கோடிக்கணக்கான ரசிகர் மற்றும் ரசிகைகள் அவரது மகன் ஜேசனின் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜேசன் ஓசையே இல்லாமல் ஒரு குறும்படத்தை எடுத்து வெளியிட்டார். அதன் பின்னர் சர்வதேச நிறுவனமான லைக்காவுடன் கை கோர்த்து உள்ளார்.
இன் நிலையில் ஜேசன் இயக்க உள்ள படத்தில் இளம் நடிகர் அதர்வா நடிப்பார், என்று எல்லாம் பேசப்பட்டு வந்தது. இன் நிலையில் வாரிசுகளின் படமாக இது இருக்கும் என்று விடையம் அறிந்த வட்டாரம் தெரித்துள்ளது. காரணம் இந்தப் படத்தில் 5 ஹீரோக்கள் உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் விக்ரம் மகன் துருவ் நடிக்க உள்ளார். காரணம் ஜேசன் மற்றும் துருவ் சிறுவதில் இருந்தே நல்ல நண்பர்கள். சில வருடங்களுக்கு முன்னர் முன் நாள் முதல்வர் ஜெயலிதா ஒரு விழா ஒன்றை நடத்தியவேளை, நடிகர் விஜயை அழைத்தார். ஆனால் அந்த விழாவுக்குச் சென்ற விஜய்க்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அவருக்கு 2ம் வரிசையில் சீட் போடப்பட்டு இருந்தது. ஆனால் மிக மிக அமைதியாக, அவர் 2ம் வரிசையில் சென்று அமர்ந்தார். இதனைக் கண்டு பொறுக்க முடியாமல், சியான் விக்ரம் எழுந்து சென்று விஜக்கு பக்கமாக உட்கார…
மேலும் சில நடிகர்கள் எழுந்து வந்து 2ம் வரிசையில் அமர்ந்து கொண்டார்கள். இதில் இருந்தே விஜயின் மிகவும் உற்ற நண்பர்களில் சியான் விக்ரமும் ஒருவர் என்பது தெளிவாகத் தெரிந்தது. இன் நிலையில் அவரது மகனை நிச்சயம் ஜேசன் விஜய் தனது படத்தில் நடிக்க வைப்பார் என்று பேசப்படுகிறது. அதுபோக AR -ரகுமானின் மகன், அமீன் இந்தப் படத்திற்கு இசை அமைக்க உள்ளார் மேலும், ஷங்கரின் மகள் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். ஒட்டு மொத்தத்தில் சினிமா வாரிசுகளின் படமாக இது இருக்க கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும் போல இருக்கே ?