2010 ல் “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா” என்ற அழகி பட்டம் பிடித்துப் பிரபலமானாவர் நடிகை “பூஜா ஹெக்டே”. அதனை தொடர்ந்து தமிழில் “முகமூடி” படத்தின் மூலம் முதல் முறையாக ஒரு நடிகையாக அறிமுகமானார். அதன் பின் தமிழ் படங்களில் நடிக்காத பூஜா தெலுங்கில் “ஓக லைலா கோசம்” என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார்.
அதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாகப் புகழ் பெற்றார். மீண்டும் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் பிளாப் ஆனதும் தமிழ் சினிமாவிற்கு பாய் பாய் சொல்லி ஹிந்தி சினிமாவில் நுழைந்தார்.
தற்போது சோசியல் மீடியாக்களில் மிகவும் சுறு சுறுப்பாக இருக்கும் பூஜா “யூத் ஐகான் 2023” விருதை என்ற விருதைப் பெற்றுள்ளார். விருதுடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.