Inside the fake village அறிந்தால் பிரிட்டன் மக்கள் நடுங்குவார்கள்: இந்த பொய்யாக உருவாக்கப்பட்ட கிராமம் !

சினிமா செட் போட்டு பாகுபலி எடுப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் வர உள்ள போருக்காக ஒரு மாதிரி கிராமத்தையே உருவாக்கி அங்கே பிரிட்டன் ராணுவம் ராணுவப் பயிற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றால் நம்புவீர்களா ? இது முற்று முழுவதுமாக பிரித்தானிய புலனாய்வுக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில். சமீபத்தில் தான், இந்த நகரம் தொடர்பாக சில செய்திகள் கசிந்துள்ளது. Inside the fake village where British troops are training to fight Putin's soldiers in Ukrainian-style combat.

உக்ரைனில் உள்ள சில தெருக்கள், மேலும் ரஷ்ய எல்லை நகரங்களில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகள் எப்படி இருக்குமோ ? அந்த மாதிரி அச்சு அசலாக இங்கே செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்திற்கு சென்றால், ஏதோ ரஷ்யாவில் நிற்பது போலத் தோன்றும். அந்த அளவு நேர்த்தியாக செயப்பட்டுள்ளது. ஆங்காங்கே வெடித்த நிலையில் கவச வாகனங்கள். இறந்து கிடக்கும் ரஷ்ய ராணுவத்தினர். என்று பார்த்தாலே கிடு நடுங்க வைக்கும், ஒரு FAKE கிராமம் இதுதான். 

இங்கே தான் பிரிட்டன் ராணுவ வீரர்கள் மிகவும் ரகசியமாக பயிற்ச்சி எடுத்து வருகிறார்கள். இவை அனைத்தையும் ஏன் பிரித்தானிய உளவுப் படை செய்கிறது என்ற கேள்வி பலருக்கு எழும். என்றோ ஒரு நாள், ரஷ்யாவோடு போர் ஒன்று ஆரம்பிக்கும் என்பதில் பிரிட்டன் மிக திண்ணமாக உள்ளது. போர் திடீரென ஆரம்பித்தால், ரஷ்யாவின் முன்னேற்றத்தை தடுக்க ஒரே வழி, ரஷ்யாவுக்குள் ஊடுருவி தாக்குவது தான். எனவே தான் பிரித்தானியா 4 ஆண்டுகளுக்கு முன்னரே தன்னை தயார்படுத்த ஆரம்பித்து விட்டது. 

இதனை எல்லாம் பிரிட்டன் மக்கள் அறிந்தால், நிம்மதியாகவே இருக்க முடியாது. அதனால் பல வருடங்களாக மிகவும் சீக்ரெட்டாக இதனை பாதுகாத்து வந்தார்கள். இந்த நகரம் எங்கே அமைந்திருக்கிறது என்ற தகவல் துல்லியமாக தெரியவில்லை. ஆனால் சில புகைப்படங்கள் மட்டும் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு காரணத்தால் இந்த FAKE நகரம் இருக்கும் இடத்தை ஊடகங்கள் வெளியிடவில்லை. 







Previous Post Next Post

Contact Form