எப்ஸ்டீன் வீட்டில் பில் கேட்ஸ் செய்த காரியம்!மெலிண்டா எச்சரித்தும் கேட்காத பில் கேட்ஸ்! அதிர வைக்கும் புதிய ஆவணங்கள்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் இடையிலான விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், தற்போது புதிய தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. 2013-ஆம் ஆண்டு எப்ஸ்டீனின் நியூயார்க் இல்லத்தில் நடந்த ஒரு இரவு விருந்தின் போது, பில் கேட்ஸ் நடந்துகொண்ட விதம் மெலிண்டாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகப் புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த விருந்து முடிந்து வெளியே வந்தபோதே, "இந்த மனிதனுடன் (எப்ஸ்டீன்) இனி எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என்று மெலிண்டா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த இரவு விருந்தில் பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான 'நெருக்கம்' வழக்கத்திற்கு மாறாக இருந்ததாக அந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, எப்ஸ்டீனின் வீட்டில் இருந்த இளம் பெண்களுடன் பில் கேட்ஸ் உரையாடிய விதம் மற்றும் அங்கு நிலவிய சூழல் ஒரு குடும்பப் பெண்ணாக மெலிண்டாவால் ஜீரணிக்க முடியாததாக இருந்துள்ளது. எப்ஸ்டீனின் இருண்ட உலகம் பற்றித் தெரிந்தே பில் கேட்ஸ் அவருடன் நட்பு பாராட்டினார் என்பதுதான் மெலிண்டாவின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. இந்தச் சந்திப்புதான் இவர்களது 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் விழுந்த முதல் பெரிய விரிசல் என்று கூறப்படுகிறது.

எப்ஸ்டீன் ஒரு 'பாலியல் வேட்டையாளர்' என்று தெரிந்தும், பில் கேட்ஸ் ஏன் அவரைத் தொடர்ந்து சந்தித்தார்? என்ற கேள்விக்கு, "உலகளாவிய சுகாதாரத் திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவதற்காகவே அவரைச் சந்தித்தேன்" என்று கேட்ஸ் தரப்பு விளக்கம் அளித்தது. ஆனால், எப்ஸ்டீன் தனது ரகசியத் தீவில் (Little St. James) வைத்திருந்த விருந்தினர்கள் பட்டியலில் பில் கேட்ஸின் பெயர் பலமுறை இடம்பெற்றுள்ளது தற்போது வெளியாகியுள்ள 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இது கேட்ஸின் பொது பிம்பத்திற்கு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மற்றொரு திடுக்கிடும் தகவலாக, பில் கேட்ஸுக்கும் ஒரு ரஷிய பாலம் (Bridge) வீராங்கனைக்கும் இருந்த ரகசியத் தொடர்பை எப்ஸ்டீன் கண்டுபிடித்து, அதை வைத்து கேட்ஸை மிரட்டியதாக (Blackmail) ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அந்தப் பெண்ணின் கல்விச் செலவை எப்ஸ்டீன் ஏற்றிருந்ததாகவும், அதைக் காரணம் காட்டித் தனது அறக்கட்டளைக்கு (Foundation) நிதி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய பலவீனமான தருணங்களை எப்ஸ்டீன் பயன்படுத்திக் கொண்டாரா? அல்லது பில் கேட்ஸ் வேண்டுமென்றே அந்தச் சதுப்பு நிலத்தில் இறங்கினாரா? என்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விவகாரத்தால் பில் கேட்ஸ் - மெலிண்டா அறக்கட்டளையின் செயல்பாடுகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. "எனது மிகப்பெரிய தவறு எப்ஸ்டீனைச் சந்தித்ததுதான்" என்று பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் புதிய ஆவணங்கள் வெளியாகும் போது அவரது பெயரும் அதில் அடிபடுவது மைக்ரோசாப்ட் வட்டாரத்தையே கவலையடையச் செய்துள்ளது. எப்ஸ்டீன் விவகாரத்தில் இன்னும் பல 'விஐபி'களின் முகமூடிகள் கிழியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பில் கேட்ஸின் பெயர் இதில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Contact Form