Source BBC: Police SHUT DOWN major UK-based illegal streaming network used for Premier League football - and make string of arrests - after Sky Sports complained
எம்மில் பலர், இன்று கூட வீடுகளில் பல விதமான BOX வைத்து TV பார்த்து வருகிறார்கள். அது தமிழ் சேனல்களோடு நின்றுவிட்டால், பெரிய பிரச்சனை அல்ல. ஆனால் அதில் ஆங்கில சேனல்கள்(SPORTS) உள்ளடங்கி இருந்தால், அதனால் சில ஆபத்துகள் வரலாம். காரணம் வெள்ளை இனத்தவர்கள் செய்யும் பெரிய NETWORK ஒன்றை பொலிசார் கண்டு பிடித்து முடக்கியுள்ளதோடு. பலரைக் கைது செய்தும் உள்ளார்கள். வீடு வீடாகச் சென்று அவர்கள், சோதனையும் நடத்தி வருகிறார்கள், என்பது BBCல் வெளியாகியுள்ள செய்தி.
இதனை எந்த வீதியில், எந்த வீட்டில் வைத்து பார்கிறார்கள் என்பதனை IP முகவரி மூலம் பொலிசாரால் கண்டு பிடிக்க முடியும். தமிழ் சேனல்களை இந்தியாவில் இருந்து பெற்று, அதனை திருட்டுத்தனமாக BOX மூலம் ஒளிபரப்பி வருகிறார்கள். ஆனால் ஆங்கில சேனல்களை ஒளிபரப்ப இவர்கள், ஒரு குறித்த ILLIGAL NETWORK இருந்து தான், அதனைப் பெறவேண்டும். அந்த வலை அமைப்பு தற்போது சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 750,000 ஆயிரம் பெறுமதியான சேவர்(SERVER)பொலிசார் கைப்பற்றி உள்ளார்கள். அதில் பல லட்சம் IP முகவரிகள் உள்ளதாம். அதாவது வீட்டில் இருந்து பார்பவர்களின் IP முகவரி.
இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் மற்றும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) சேனல்களை சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் 'பயர்பாக்ஸ் ஸ்டிக்' (Firestick) (Box )மூலம் ஒளிபரப்பிய மிகப்பெரிய நெட்வொர்க்கை லண்டன் மாநகர காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. மான்செஸ்டர் மற்றும் போல்டன் பகுதிகளில் கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், சுமார் 7,50,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ₹8 கோடி) மதிப்புள்ள 10 அதிநவீன சர்வர்கள் மற்றும் மின்னணு உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையின்போது இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத கும்பல் சுமார் 30 லட்சம் (3 Million) பவுண்டுகளுக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையின் அறிவுசார் சொத்துரிமை குற்றப்பிரிவு (PIPCU) இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த கும்பல் இங்கிலாந்து முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோத ஐபிடிவி (IPTV) சேவைகளை வழங்கி வந்துள்ளது. கைதானவர்களில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இந்த மொத்த மோசடியின் பின்னணியில் இருந்து பல கோடி ரூபாய் லாபம் பார்த்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
பிரிட்டனில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக, மக்கள் இதுபோன்ற மலிவான சட்டவிரோத சேவைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அரசு மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த 'டிஜிட்டல் திருட்டுக்கு' எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை ஆயிரக்கணக்கான சட்டவிரோத விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. பிடிபட்ட சர்வர்கள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே முடக்கப்பட்டதால், அந்த சேவையை பயன்படுத்தி வந்த லட்சக்கணக்கானவர்களின் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
