சென்னை மக்களே உஷார்! இந்த பகுதிகளில் 5 மணி நேரம் மின்வெட்டு - முழு விவரம் உள்ளே!

சென்னை: சென்னையில் நிலவும் கோடை காலத் தேவையை முன்னிட்டு, மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கத் தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிரமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,  இன்று பிப்ரவரி 5, 2026 (வியாழக்கிழமை) அன்று சென்னையின் முக்கியப் புறநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முன்னதாகவே முடிந்தால், மதியம் 2 மணிக்கு முன்பாகவே மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.

திருமுடிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்: திருமுடிவாக்கம் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு காரணமாக சோமங்கலம், மேலத்தூர், டிசி நகர், சக்தி நகர், புதுப்பேடு மேடு மற்றும் பள்ளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மேலும், சிஐடி (CIT) கல்லூரி வளாகம், நடுவீரப்பட்டு காந்தி நகர், ராம்ஜி நகர், தாம்பரம் மெயின் ரோடு மற்றும் பூந்தண்டலம் ஆகிய இடங்களிலும் நாளை மின்தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகீழ்பாக்கம் மற்றும் செம்பாக்கம் பகுதிகள்: ராஜகீழ்பாக்கம் பகுதியில் வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர், மகாலட்சுமி நகர், மாருதி நகர், கோமதி நகர் மற்றும் ஐயப்ப நகர் ஆகிய இடங்களில் மின்வெட்டு ஏற்படும். இதனைத் தொடர்ந்து அண்ணா தெரு, பாரதியார் தெரு, ரங்கா காலனி, நேதாஜி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, ஐஓபி காலனி, கேம்ப் ரோடு, மாடம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

திருவேற்காடு மற்றும் பிற இடங்கள்: திருவேற்காடு துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் சன்னதி தெரு, திருவேங்கட நகர், சின்ன கோலடி மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாளை மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Previous Post Next Post

Contact Form