சென்னை வேளச்சேரி தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது. ஜோதிட ரீதியான 'வி' (V) என்ற எழுத்து சென்டிமென்ட் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், நிர்வாக ரீதியாக பனையூரில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகாமையில் இத்தொகுதி இருப்பது பிரசாரத்திற்கு வசதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
தமிழக அரசியலில் நடிகர்கள் தடம் பதிக்கும் நீண்ட கால வரிசையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது இணைந்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற திரைத்துறை பிரபலங்கள் தங்களின் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்த நிலையில், விஜய்யும் அதே போன்றதொரு பெரும் எதிர்பார்ப்புடன் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறார். ஏற்கனவே பல மாவட்டங்களில் அவர் போட்டியிடக்கூடும் என வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அவர் தலைநகர் சென்னையில் உள்ள ஒரு தொகுதியைத் தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, சென்னை வேளச்சேரி தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது. ஜோதிட ரீதியான 'வி' (V) என்ற எழுத்து சென்டிமென்ட் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், நிர்வாக ரீதியாக பனையூரில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகாமையில் இத்தொகுதி இருப்பது பிரசாரத்திற்கு வசதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், இத்தொகுதியில் இளைஞர்கள் மற்றும் ஐ.டி துறையைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் இருப்பது விஜய்க்கு கூடுதல் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
வேளச்சேரி தொகுதி உருவான காலத்திலிருந்தே அங்கு தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய திராவிடக் கட்சிகள் நேரடியாகப் பெரிய அளவில் வேரூன்றவில்லை என்பதும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. தற்போது காங்கிரஸ் வசம் உள்ள இத்தொகுதியில், வரும் தேர்தலில் வலுவான போட்டி நிலவும் சூழலில் விஜய்யின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை விஜய்யின் தொகுதி குறித்த சஸ்பென்ஸ் நீடிக்கும் என்றே தெரிகிறது.
