அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா: நுரையீரல் வரை பரவிய கொரோனா தொற்று !

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வருகிற 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று முன் தினம் மாலை திடீரென சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு சிறைக்கு விரைந்தனர். அவருக்கு சளி, இருமல், உயர் ரத்த அழுத்தம், மூச்சு தினறல் இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெங்களூரு சிறையில் இருந்து பவுரிங் மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அப்போது, ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து சக்கர நாற்காலியில் சசிகலா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்படும் வீடியோ வெளியானது. அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட சசிகலா, உடல் நிலை குறித்து சற்று கவலையான விடையம் வெளியாகியுள்ளது.

அவர் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் இருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. கொரோனா தொற்று நன்றாக முற்றிய பின்னரே சிறை நிர்வாகம், மருத்துவர்களை அழைத்துள்ளது. ஆனால் தற்போது அவருக்கு கொரோனா இல்லை என்ற ரிப்போட் தற்போது வந்துள்ளது என்கிறார்கள்.

Contact Us