கமல்ஹாசனை காலில் வைத்து மிதித்த பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நான்காவது சீசன் மூலம் அனைவருக்கும் தெரியக்கூடிய மனிதராக பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் நான்காவது சீசன் தொடங்கியபோது பாலாஜி முருகதாஸ் என்ற ரசிகர் பட்டாளம் உருவானது. நாளடைவில் பிக்பாஸில் பாலாஜி சேட்டைகள் மூலம் அதிகமான வெறுப்புகளை மக்களிடம் சம்பாதிக்க ஆரம்பித்தார். அளவுக்கு மீறிய கோபம், வயதில் மூத்தவர்களை கூட மதிக்காமல் பேசுவது போன்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவர் மீது சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டது.

இதனிடையே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபோது பாலாஜி முருகதாசுக்கு ஜோ மைக்கேல் என்ற நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஜோ மைக்கேல்ஸ் நிறுவனம் ஒரு டுபாக்கூர் நிறுவனம் என சனம் ஷெட்டி முன்னாடி கூறினார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது பாலாஜி முருகதாஸ் ஆதரவு செய்யும் வகையில் பாலாஜி ரசிகர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் பாலாஜி பத்திரகாளி ஆகவும் பிக்பாஸில் உள்ள மற்ற போட்டியாளர்களின் தலைகளை பாலாஜி கையில் பிடித்துள்ளது போலவும், மேலும் கமல்ஹாசன் மீது கால்வைத்து மிதித்தபடி அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸில் பாலாஜி செய்த சேட்டைகளுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியிருக்க வேண்டும், ஏன் இவருக்கு இரண்டாமிடத்தை கொடுத்தனர்? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Contact Us