பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா என கண்டு பிடிக்கப்பட்டது

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகளின் அடிப்படையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனடிப்படையில் குறித்த மாணவனுடன் கல்வி பயின்ற 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவனின் தாய்க்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Contact Us