தமிழீழம் என்று தனிநாடு கோரிக்கை தற்போது கிடையாது; சும்மி சொல்லுறத எல்லோரும் கேளுங்க!

இந்த நாட்டில் நாங்கள் ஒருபோதும் தனி நாடு கோரவில்லை.தமிழ் ஈழம் அல்லது தமிழ் நாடு உருவாக வேண்டுமென்ற கோரிக்கை தற்போது கிடையாது.இதன் காரணமாகவே பிரிவினைவாதம் நிலவுகின்றது.

மேலும் இந்த நாட்டில் ஐக்கிய இலங்கைக்குள் நாங்கள் ஒற்றுமையாக செயற்பட கூடிய சூழல் காணப்படுகின்றது. நாங்கள் ஒருபோதும் இரண்டாம், மூன்றாம் தர பிரஜையாக ஒருபோதும் வாழமாட்டோம் என்பதில் உறுதியாகவுள்ளளோம்.

அத்தோடு தனிநாடு கோரும் போது தான் பிரிவினை ஏற்படும்.ஆனால் தற்போது நாங்கள் தனிநாடு கோராமலே எங்களை தனித்தனியாக வைத்து எங்களை பேரினவாதம் எம்மை தாக்குகின்றது.அதற்கு சிறுபான்மை ஆன நாம் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.

அத்தோடு மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கனேடிய தமிழ் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்கள் இயக்குநர் ஏ.எம்.பாயிஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Contact Us