இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தந்தையா? சிக்னல் சந்தியில் நடந்த நெகிழ்வு சம்பவம்!

இன்றைய காலத்தில் குழந்தைகளின் அரிவுத் தேடல்களுக்கும் கலை முயற்சிகளுக்கும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளை குழப்பாமல் இருப்பதே முக்கியமானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

குறிப்பாக குழந்தைகள் வீட்டுச் சுவரில் படங்கள் கிறுக்கும்போது பெற்றோரால் கண்டிக்கப்படுமாயின் அந்த குழந்தைகளின் தேடல் முயற்சிகள் பாதிக்கப்படுகின்றன என அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ஆனால் இவற்றுக்கு மாறாக இலங்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்….

இன்று வரும் வழியில் சிக்னலுக்காக காத்திருந்த போது இந்த காரை கண்டேன். அதை செலுத்திய அந்த மனிதர் மீதினில் பெருமதிப்பு ஏற்பட்டது.

ஆம் அவரது வண்டியின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்து விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு 3/4 வயதிருக்கும். நான் கையசைத்த போது பதிலுக்கு கையசைத்தாள் குதூகலத்துடன்.

பெற்றோல் நிரப்ப அந்த கார் நிறுத்தப்படும் வரை அந்த காரை ஏனோ பின் தொடர்ந்தேன். “என் மகள் தான் காரில் கீறியது, அதை பெயின்ட் மூலம் திருத்திக் கொள்ளலாம்.

பிள்ளைக்கு ஏசி என்னவாகப் போகிறது?” என்றார் தந்தை. எத்தனை கருணையுள்ள மனிதரிவர்? என்று எண்ணியவாறு பிள்ளையை பார்த்தேன் புதிய சித்திரக் கொப்பியில் புதிதாக வாங்கிய chalk colour கொண்டு எதையோ வரைந்து கொண்டிருந்தாள்.

இப்படியும் மனிதர்கள்.

நன்றி: Fauzuna binth Izzadeen என்பவரின் முகநூல் பதிவிலிருந்து.

Contact Us