பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு; பரிதாபமாக பறிபோன உயிர்..!

பாணந்துறை – வாழைத்தோட்டம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலும் இச் சம்பவ இடத்திலிருந்து T56 துப்பாக்கிகளுக்கான 04 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்தோடு எகடஉயன பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் முகத்தை முழுமையாக மூடி மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்தவர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Contact Us