மன்னார் ஆயர் இல்லத்தின் அட்டுழியம்: பொங்கியெழுந்த மக்கள்; பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடாமலிருக்கும் ஊடகங்கள்!

மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் தற்போது ஆர்பாட்டமொன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரியபண்டிவிரிச்சான் ஏழை விவசாயிகள் கோவில்மோட்டை பகுதியில் பல வருடங்களாக விவசாயம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது மடுத்தேவாலய பங்குத்தந்தைகள் அந்த காணியை பறித்து தனியார் தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்காக, மன்னார் மாவட்ட செயலாளர் ஸ்டான்லி டிமெல்ட் அவர்கள், மடு உதவி பிரதேச செயலாரையும், விவசாயிகளையும் மிரட்டி பறிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனால் வறுமையின் பிடியிலிருக்கும் விவசாயிகள் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாமல் மடுத்தேவாலயத்திற்கு அண்மித்த மடு பிரதேச செயலகத்திற்கு முன்னர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Contact Us