கனடாவில் கவுன்சிலே முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைத்து கொடுக்கிறது- தமிழன் என்றால் இது தான் !

கடந்த மாதம் யாழ் பல்கலைக் கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இலங்கை அரசு இடித்து, பெரும் சிக்கலில் மாட்டியது தான் மிச்சம். உலக தமிழர்கள் இணைந்து இதற்காக குரல் கொடுத்துள்ள விடையம். உலக அரங்கில் ஒரு இடத்தை பிடித்துள்ளது. இதில் கனடாவில் புரோம்டன் வாழ் தமிழர்கள் நடத்திய பெரும் கார் ஊர்வலம். அதனை தொடர்ந்து அவர்கள் நடத்திய போராட்டம் என்பன, அன் நாட்டு கவுன்சிலரை விழிக்கச் செய்துள்ளது.

இதன் காரணமாக இடித்து அழிக்கப்பட்ட அதே நினைவு தூபியை, தாம் தமது மாநிலத்தில் முக்கிய இடம் ஒன்றில் கட்டி தருவதாக புரொம்டன் கவுன்சில் தற்போது அறிவித்து தமிழர்களுக்கு வரலாற்று புகழ் கொடுத்துள்ளது. இதனை சிங்கள அரசு சற்றும் எதிர்பார்த்திருக்காது. முள்ளிவாய்க்கால் தூபியை இடித்தால், அது ஆயிரம் இடங்களில் புதிதாக உருவாகும் என்று காட்டி உள்ளார்கள் தமிழர்கள். ஈழத் தமிழர்கள் என்றால் என்ன சும்மாவா ?

Contact Us