சாவதற்கு சற்று நேரம் முன்: மனைவி லிண்டாவை நான் ரெம்பவும் மிஸ் பண்ணுகிறேன் என்ற டோனியின் வீடியோ

பிரித்தானியாவில் உள்ள மக்கள் ஏன், கொரோனாவை சாதாரணமாக கருத கூடாது ? என்பதற்காக வெளியிடப்பட்ட உண்மையான வீடியோ இது. இங்கே பேசும் வெறும் 59 வயதே ஆகும் டோனி என்பவருக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு, 4 நாட்களில் வைத்தியசாலை வந்தார். ஆனால் 2 வாரத்தில் அவர் இறந்து விட்டார். கடைசியாக அவர் கடந்த வெள்ளிக் கிழமை அன்று மதியம். தனது மனைவி லிண்டாவை நான் பார்க்க ஆசைப்படுகிறேன்.

அவரை ரெம்பவும் மிஸ் பண்ணுகிறேன் என்று கூறி இருந்தார். இனி என்னால் சென்று அவரை பார்க்க முடியுமோ தெரியவில்லை என்று கூட அவர் கூறுகிறார். இதனை அடுத்து ZOOM இல் லிண்டாவை தொடர்பு கொண்ட வைத்தியர். அவர்கள் இருவரையும் கடைசியாக Video Call மூலம் பேச ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்கள்.

அவர் விடை பெறுகிறார். உன்னை நான் ரெம்பவும் நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார். அத்தோடு நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். நான் ஏதாவது பிழை விட்டிருந்தால் என்னை மன்னித்து விடு லிண்டா என்றும் கூறுகிறார்.

ஆனால் அன்று மலையே டோனி , உயிர் இழந்து விட்டார். கொரோனாவை சாதாரணமாக நினைக்க வேண்டாம். முக கவசம் அணியாமல் செல்லவேண்டாம் என்று மக்கள் உணர வேண்டும் என்பதற்காக மனைவி லிண்டா, தனது கணவரின் இறுதி உரையாடலை வெளியிட அனுமதி கொடுத்துள்ளார்.  இந்த வீடியோ லண்டனில் வெளியாகி அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

Contact Us