ஒட்டு மொத்தமாக 30,000 ஆயிரம் பொய்களை சொன்ன ரம்- உலக மகா பொய் நாயகன் டா …

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது பதவிக்காலத்தில், 30,573 பொய்களை பொதுவெளியில் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், தொடர்ந்து சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்தார்.தற்போது அதிபர் பதவியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பதவிக்காலத்தில் ஏராளமான முறை பொய்களை உரைத்தது தெரியவந்துள்ளது. அவர் தெரிவித்த பொய்களின் எண்ணிக்கை 30573.

டைம் இதழின் அட்டைப்படத்தில் அதிக முறை தோன்றி சாதனை படைத்துள்ளதாக கூறியதிலிருந்து, டிரம்பின் பொய் பிரசாரம் தொடங்கியுள்ளது.அதிபர் பதவியிலிருந்த முதல் ஆண்டில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 6 தவறான தகவல்களை தெரிவித்த அவர், next அந்த எண்ணிக்கையை இரண்டாவது ஆண்டில் 16, next மூன்றாவது ஆண்டில் 22 மற்றும் இறுதி ஆண்டில் 39 என தொடர்ந்து அதிகப்படுத்தி உள்ளார்.

அவர் தெரிவித்த தவறான தகவல்களில் பெரும்பாலானவை, நீக்கம் செய்யப்பட்ட அவரது டிவிட்டர் கணக்கு வாயிலாகவே தெரிவித்துள்ளார். புதிய வரி திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அளவில் வரிகளை குறைத்த அதிபர் தான் என, பொய்யான பெருமைகளை அவர் பேசியுள்ளார்.

கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட நிலையில், next அமெரிக்காவின் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு தான் தான் காரணம் என டிரம்ப் ஆறாயிரத்திற்கும் அதிகமான முறை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில், அதனை தான் வென்று விட்டதாகவும், அதிசயம் நிகழ்ந்தது போல் அது காணாமல் போய்விடும் என்றும் கூறினார். இதேபோல, மோசமான சுகாதார உட்கட்டமைப்புக்கு முன்னாள் அதிபர் ஒபாமா தான் காரணம் என கூறியது, டிரம்பின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

குறிப்பாக தேர்தல் நெருங்கிய கடைசி 5 மாதங்களில் டிரம்ப் தெரிவித்த, பொய்யான தகவல்களின் எண்ணிக்கை மட்டும் பத்தாயிரத்தை கடந்து உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் வெற்றி திருடப்பட்டு உள்ளது இது ஒரு மோசமான தேர்தல் என பல பொய்களை, டிரம்ப் கட்டவிழ்த்துள்ளார். இவ்வாறு அவர் கூறிய தவறான தகவல்களில் பல்வேறு தகவல்கள், அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Contact Us