மகனுக்காக உயிரை தியாகம் செய்த தாய்..!

மொனராகலை – ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த பெண் காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் 41 வயதுடைய மயிலவளை பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அத்தோடு குறித்த காவல் துறை உத்தியோகத்தரின் மூத்த மகன் சுகயீனமுற்றிருந்ததாகவும், குறித்த மகனின் நலன் மீது கணவர் பாராமுகமாக செயற்பட்டதாகவும், அதனாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டுள்ள பெண் காவல் துறை உத்தியோகத்தரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்கான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us