40 மில்லியன் தடுப்பூசிகள் லண்டன் செல்ல தடை: EU ஹிட்லராக மாறி விட்டதா ?

பைசர் தடுப்பு மருந்தை தயாரிக்கும் அமெரிக்க கம்பெனி பெல்ஜியத்தில் இயங்கி வருகிறது. அன் நிறுவனம் 40 மில்லியன் மேலதிக தடுப்பூசிகளை பிரித்தானியாவுக்கு வழங்க இருந்த நிலையில். இதனை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்த மருந்துகள் பிரித்தானியா சென்றாலும். முன் கூட்டியே ஐரோப்பிய சுகாதார துறைக்கு அன் நிறுவனம் அறிவித்து. அனுமதி பெறவேண்டும் என்று கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவை எட்ட ஜேர்மன் நாடே காரணம் என்று கூறப்படுகிறது. அத்தோடு ஆக்ஸ்ஃபேட் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் முதியவர்களிடம் வெறும் 8% சத விகிதம் தான் வேலை செய்கிறது. எனவே ஆக்ஸ்பேஃட் மருந்து தங்களுக்கு வேண்டாம் என்றும் ஜேர்மனி அறிவித்துள்ள விடையம், பெரும் இனவாதத்தை கக்குவதாக அமைந்துள்ளது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆஸ்ரா ஸ்சென்கா தனியார் நிறுவனம் ஒன்று. ஆக்ஸ்பேஃட் தடுப்பு மருந்து சரியாக வேலை செய்கிறது என்று அறிவித்துள்ளார்கள்.  Source DM : The great vaccine blockade? EU threat to cut off UK’s supply of Pfizer jabs will ‘poison relations for a generation’ as Germans are accused of ‘Russian-style’ disinformation over ‘rubbish’ claim that AstraZeneca version is.

இது போக பிரித்தானியா மீது அறிவிக்கப்படாத ஒரு யுத்தத்தை ஆரம்பித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். பல ஐரோப்பிய நாடுகள் இதுவரை தமது முன்னணி கள வேலை ஆட்களுக்கு கூட தடுப்பு மருந்தை கொடுக்கவில்லை. ஆனால் பிரித்தானியா தனது களப் பணியார்களுக்கு தடுப்பு மருந்தை கொடுத்து முடித்துள்ளதோடு. 90வயது, 80 வயது மற்றும் 70வயது முதியவர்களுக்கும் தடுப்பு மருந்தை கொடுக்க ஆரம்பித்து விட்டது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பு மருந்தை பிரித்தானியாவுக்கு இனி கொடுக்க கூடாது என்று ஜேர்மனியில் ஆங்காங்கே கலவரங்கள் இடம்பெற்று வருகிறது.

ஆனால் தடுப்பு மருந்து கம்பெனிகளோடு சரியான ஒப்பந்தங்களை முதன் முதலில் செய்து கொண்டது பிரித்தானியா தான். அது போக உடனடியாக பணத்தை வாரி இறைத்து, தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்தார்கள். இதனை ஏனைய ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. ஒரு நாட்டுக்கு செல்லும் உயிர் காக்கும் மருந்தை கூட தடை செய்து. ஒரு நாட்டு மக்களை கொல்லும் அளவுக்கு சென்றுவிட்டது ஐரோப்பிய ஒன்றியம். இதனை விட இழிவான செயல் இருக்க முடியாது.

Contact Us