கடற்கரையில் காதலருக்கு உம்மா கொடுத்த பிக் பாஸ் ஜூலி..

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜூலி. ஆனால் அந்த புகழ் கொஞ்ச நாட்கள் கூட நிலைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்புகொடுத்து ஜூலியின் மரியாதையை கெடுத்து விட்டது விஜய் டிவி.

வீர தமிழச்சியாக விஜய் டிவிக்கு சென்றவர் வீணாப்போன தமிழச்சியாக தான் வெளியே வந்தார். அதன்பிறகு தனக்கு வந்த நெகட்டிவ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறார் ஜூலி.

அடிக்கடி வித்தியாசமான போட்டோ ஷூட் எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற ஜூலிக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்தப் படங்களின் முதல் பார்வைக்கு வரவேற்பு இல்லாததால் அனைத்து படங்களும் பாதியில் நிறுத்தப்பட்டது. அதிலும் ஜூலி அம்மனாக நடித்த படம் ஒன்றுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் உச்சகட்டம் தான்.

சரி அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து மீடியாவில் தன் முகத்தை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது போன்று தற்போது இல்லை. மொத்தமும் மாறி வேறு ஆளாக நிற்கிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கடற்கரையில் தன்னுடைய காதலனுடன் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜூலி.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

Contact Us