விஜய் டிவியின் செல்ல பிள்ளை VJ பிரியங்கா எப்படி நிகழ்சியில் இருந்து ஒதுங்கினார் ? களற்றி விடப்பட்டாரா ?

விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று கூறுமளவிற்கு அந்த சேனலில் பெரிய பங்கு வகிக்கிறார் VJ பிரியங்கா. ஏனென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அழகைக் காண்பதற்காகவே பலர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது உண்டு. அந்த அளவிற்கு திறமையான தொகுப்பாளினி தான் VJ பிரியங்கா.

எனவே இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தான் பெரிதும் பிரபலமானார். இந்த சூழலில் நேற்று முன் தினம் 9 மணி நேரம் ஒளிபரப்பாகி விஜய் டிவியில் களைகட்டிய சீனியர் சூப்பர் சிங்கர் சீசன்-8 நிகழ்ச்சியில் மா.கா.பா ஆனந்த், மணிமேகலை இணைந்து தொகுத்து வழங்கினார்.

இருப்பினும் பிரியங்கா, மா.கா.பா ஆனந்த் ஜோடி இணைந்து தொகுத்து வழங்கினால், காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் பெரும் அதிருப்தியடைந்தனர்.

ஆகையால் நேற்று முன் தினம் காலை 11 மணி தொடங்கி இரவு 8 வரை நடைபெற்ற சீனியர் சூப்பர் சிங்கர் சீசன்-8 நிகழ்ச்சியில் பிரியங்கா விலக்கப் பட்டதற்கு என்ன காரணம் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.

அதேபோல் இனிவரும் வாரங்களில் பிரியங்கா விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? மாட்டாரா? என்ற கேள்வியும் எழத் தொடங்கியுள்ளது.

Contact Us