மாஸ்டர் படத்தில் மாளவிகாவுக்கு குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. அடேங்கப்பா இவங்களுக்கு இவ்வளவு திறமையா?

தற்போது தளபதியின் மாஸ்டர் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு சுமார் 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஸ்ரீநாத், சஞ்சீவ், ஸ்ரீமான்,கௌரி கிஷன் போன்ற பல்வேறு பிரபலங்கள் மாஸ்டர் படத்தில் கைகோர்த்திருப்பார்கள்.

ஆகையால் மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்த பிரபலத்தை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் மாஸ்டர் தெலுங்கு டப்பிங்கில் மாளவிகாவிற்கு விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சுஜித்ரா குரல் கொடுத்திருப்பதாக, அவரே தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் மாளவிகா மோகனனுக்கு நடிகை ரவீனா ரவி தமிழில் டப்பிங் பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுஜித்ரா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார்.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முன்னணி சீரியல்களின் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் நாடகத்தில் அண்ணியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஜித்ரா மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Contact Us