மொத்த உலகில் 100 மில்லியன் பேருக்கு கொரோனா: 2.1 மில்லியன் பேர் இறந்துள்ளார்கள் என்ற அதிரும் தரவு !

மொத்த உலகில் இன்றோடு 100 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும். இதுவரையில் இந்த பாதிப்பால் 2.1மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும் அதிரும் தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார மையம். இதில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் இறந்துள்ளார்கள். இது போக பிரித்தானியாவில் 1 லட்சம் பேர் இறந்துள்ளார்கள், இதனை அடுத்து பிரேசில் நாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போய் உள்ளார்கள்.

தற்போது பிரித்தானியாவில் போடப்பட்டுள்ள லாக் டவுன் சற்று பயன் தருகிறது. தொற்று விகிதம் வெகுவாகக் குறைவடைந்து வருகிறது. ஆனால் இறப்பு விகிதமே மிகவும் அதிகமாக இருந்து வருகிறது என்பது கவலை தரும் விடையமாக உள்ளது.

Contact Us