ராகுல் காந்தியிடம் 7 பேர் பிரச்சனையை எழுப்பி பெரும் சங்கடத்தில் போட்ட பத்திரிகையாளர்கள் !

ராகுல் ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே!

இவ்வாறு கேட்டு நச்சரித்து விட்டார்கள் ஊடகவியலாளர்கள். தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், மொழி, நெசவுத் தொழில் இப்படி எல்லாவற்றையும் பற்றி பேசிய ராகுல் காந்தி எழுவர் விடுதலை குறித்து எதையும் பேசவில்லை, செய்தியாளர் கேள்வியையும் புறக்கணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் அரசியல்வாதிகள் குட்டிக் கரணம் அடிக்கவும் தயங்க மாட்டார்கள். இந்த நேரத்தில் அவர்கள் செல்லாத இண்டு இடுக்கு தெருக்கள் இருக்காது. அந்த வகையில் தமிழகத்தில் ராகுல்காந்தி கடந்த 3 தினங்களாக கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது மோடி அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் தமிழ் மொழிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மோடி அரசு கொடுக்கவில்லை என்றார். நான் தமிழன் இல்லாவிட்டாலும் தமிழ் உணர்வு என்னிடம் இருக்கிறது. அதை மதிக்கிறேன். தமிழர்களின் கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றை மதிக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர் பால்கோட் தாக்குதல் குறித்து செய்தியாளருக்கு தெரிந்தது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அது குறித்து விளக்கமாக பதில் அளித்தார் ராகுல். இதையடுத்து அதே செய்தியாளர் பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது ராகுல் நீங்கள் ஏற்கெனவே கேட்ட கேள்விக்கு பதில் அளித்துவிட்டேன். மற்றவர்கள் கேள்வி கேட்க விடுங்கள் என கூறி அந்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துவிட்டார்.

ஒட்டு மொத்ததில் நழுவிக் கொண்டார்.

Contact Us