முந்திய சீனா: 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு நாளை வழங்குகிறது இதிலும் இந்தியாவுக்கு பெரும் அடி !

நாளை முன் பகல் 11 மணிக்கு, சீன உயர்ஸ்தானிகள் கோட்டபாயவிடம் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உத்தியோக பூர்வமாக கையளிக்க உள்ளார். இதனை அரசு பெரிதும் எதிர்பார்த்து இருந்த இந்த வேளை. இன்றைய தினம்(27) மருந்து சீனாவில் இருந்து இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இந்த இடத்தில் கூட இந்தியா பின் நோக்கி தள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு தற்போது எது அவசியமோ அதனை சீனா கொடுத்து தனது இடத்தை தக்கவைத்துள்ளது.

இந்த 3 லட்சம் மருந்துகளும் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்தே இந்தியா இலங்கைக்கு 5 லட்சம் மருந்துகளை தாம் இலவசமாக தருவதாக கூறியுள்ளது. அவை அடுத்த வாரம் கொழும்பு வந்து சேரும் என்று எதிர்பார்கப்படுகிறது. இப்படி இலங்கைக்கு போட்டி போட்டுக்கொண்டு உதவ 2 நாடுகள் உள்ளது பாருங்கள்.

Contact Us