மீண்டும் லைக்கா நிறுவனத்தின் மாபெரும் பிரம்மாண்ட திரைப்படம்- சூப்பர் ஹீரோவோடு கை கோர்ப்பு !

நட்சத்திர நாயகன் சிவ கார்திகேயனை வைத்து, லைக்கா நிறுவனம் பெரும் பிரம்மாண்ட படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் என்பதும் தெரிந்ததே . இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சற்று முன் லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Contact Us