தி.மு.காவில் இணைந்தார் நாம் தமிழர் கட்சி ராஜீவ் காந்தி: ஸ்டாலின் நேரடியாக வரவேற்றார்

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் என அதிர்வு இணையம் அறிகிறது.

இதுதொடர்பாக திமுகவின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (27.1.2021), மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இராமநாதபுரம் மாவட்டம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி – மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சு.அமர்நாத் – வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் வழக்கறிஞர் மு.இரமேஷ் திருவாடானை தொகுதி பொருளாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், வெளிநாடுவாழ் இந்தியர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், எம்.பி., சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அ.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணன் சீமான் அவர்களது கட்சியில் இருந்து சென்றர் என்பதற்காக ஸ்டாலின் அவர்களே அவரை வரவேற்றார் என்றால், அந்தப் பெருமையும் அண்ணன் சீமானையே சாரும். அவர் அசைக்க முடியாத சக்தியாக மாறி விட்டார் என்பது தான் உண்மை.

Contact Us