ஒன்லைனில் ஆர்டரா?’.. தமிழகத்தையே உறைய வைத்த சீர்காழி கொள்ளை சம்பவத்தில் ‘பரபரப்பு’ திருப்பம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள தர்மகுளம் பகுதியில் நகைக் கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வந்தவர் தன்ராஜ் சௌத்ரி.

இவர் தனது மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். 50 வயதான தன்ராஜ் செளத்ரி. இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில், தன்ராஜ் வீட்டுக்குள் புகுந்த வடமாநில கொள்ளையர்கள் அவருடைய மனைவி மகனை கொன்றுவிட்டு 16 கிலோ நகைகளை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக போலீஸ்க்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் கொள்ளையர்கள் சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட 16 கிலோ நகைகளும் மீட்கப்பட்டது. சிக்கிய 3 கொள்ளையர்களுள் ஒரு நபர் தப்பிக்க முயற்சி செய்ததால் காவல்துறை அதிகாரிகள் அவரை துப்பாக்கியால் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். முன்னதாக கொள்ளை சம்பவம் நடக்கும்போது கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி தான் இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருந்தனர்.

தற்போது அந்த துப்பாக்கி பொம்மை துப்பாக்கி என்று தெரியவந்திருக்கிறது. மேலும் இந்த பொம்மை துப்பாக்கியை அந்த கொள்ளையர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.

அந்த துப்பாக்கியை கொண்டு இவர்கள் கொள்ளையடிக்க சென்றுள்ளதும், அதை வைத்து மிரட்டி நகை உள்ளிட்டவற்றை பறிக்க முயன்ற அவர்கள், இருவரைக் கொன்று விட்டு 16 கிலோ மதிப்புள்ள நகைகளை அள்ளி கொண்டு சென்றுள்ளதும் இப்போது தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்த கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த கருணாராம் என்பவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதை அடுத்து 3 பேர் இன்று சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அமிர்தம் முன்னிலையில் ஆஜர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Contact Us