ஆறு நாட்கள் கழித்து, மீண்டும்…’ ‘சசிகலா உடல்நிலை குறித்து…’ – மருத்துவமனை வெளியிட்ட தகவல்…!

சசிகலாவிற்கு ஆறு நாள்கள் கழித்து மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 20-ஆம் தேதி அன்று சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, அவர் பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பெளரிங் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அங்கிருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து, அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு மறுபடியும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை தரப்பில் மேலும் தெரிவிக்கையில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 278ஆக இருப்பதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Us