நண்பன் செய்த துரோகம்…! ‘திடீர்னு உள்ள நுழைஞ்ச போலீஸ்…’ ‘அங்கயே மொத ட்விஸ்ட்…’ – எல்லா திட்டத்தையும் போட்டுட்டு கூடவே இருந்த நண்பன்…!

சென்னை எம்கேபி நகரில் வசித்து வருபவர் முகமது ரஃபீக். பங்குச்சந்தை முதலீட்டு அலுவலகம் நடத்தி வரும் இவர் தன் நண்பர் விஜயகுமார் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது விஜயகுமார் போதை தலைக்கேறும் வரை ரஃபீக்கிற்கு மதுவை அளித்துள்ளார். அந்த நேரத்தில் விஜயகுமார் வீட்டிற்கு போலீசார் என கூறிக்கொண்டு 5 பேர் வீட்டிற்குள் நுழைந்து, இருவரின் பெயரிலும் புகார் வந்துள்ளதாகவும், சந்தேகத்தின் பெயரில் இருவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்துச் சென்றனர்.

போலீசாராக வந்தவர்கள் போதையில் இருந்த ரஃபீக்கிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்து, ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் டீமேட் கணக்கு மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். மேலும், அதிகாலை வரை ரஃபீக் மற்றும் விஜயகுமாரை காரில் வைத்து சுற்றிவிட்டு மாதவரம் ரவுண்டானா பகுதியில் இருவரையும் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மது போதை குறைந்த நிலையில் ரஃபீக்கும் விஜயகுமாரும் எம்கேபி நகர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பேசிய விஜயகுமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Contact Us