மன்னாரில் நடந்த துயரம்; இருவரை சடலமாக மீட்ட பொலிஸார்!

மன்னாரில் விலங்குகளை வேட்டையாட அமைத்த மின்சார வேலியில் சிக்கி இரண்டு குடும்பஸ்தர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு சற்று தொலைவிலேயே இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று (29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us