மீண்டும் தொற்றுப் போன EU: கடும் அடிபாட்டுக்கு மத்தியில் 60 மில்லியன் நோவா-வாக்ஸ் ஊசிகளுக்கு ஒப்பந்தம் செய்த பிரிட்டன் !

தற்போது கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து செய்யும் கம்பெனிகளை வளைத்துப் போட்டு, முடிந்தால் தமது அதிகாரத்தை பயன்படுத்தி, தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் முனைந்து வருகிறது. இது ஒரு பெரும் போராக மாறியுள்ள நிலையில். ஐரோப்பிய நாடுகளில், உள்ள தடுப்பூசி கம்பெனிகளிடம் இருந்து பிரித்தானியாவுக்கு ஊசிகளை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வரும் நிலையில்.

நோவா-வாக்ஸ்(NovaVax) என்னும் அமெரிக்க கம்பெனி ஒன்றிடம், டீல் பேசி 60 மில்லியன் தடுப்பூசிகளுக்கான இறக்குமதி ஒப்பந்தத்தில் பிரிட்டன் கைச்சாத்திட்டுள்ளது. இந்த டீல் நடந்து முடிந்து 9 நிமிடங்களுக்கு பின்னரே, ஐரோப்பிய ஒன்றிய நபர்கள் குறித்த கம்பெனிக்கு சென்று டீல் பேசி உள்ளார்கள். ஆனால் தாம் 60 மில்லியன் மருந்துகளை பிரிட்டனுக்கு கொடுக்க பேரம் பேசி முடித்து விட்டோம். அதன் பின்னரே உங்களுக்கு தர முடியும் என்று, நோவா வாக்ஸ் கம்பெனி அடித்து கூறியதை அடுத்து.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மேலும் கடுப்பாகி, என்ன வழியில் பிரித்தானியாவுக்கு அப்பு வைக்க முடியும் என்று தேடி அலைகிறார்கள். உலகில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த தரகர்களை(Middle Man) தன் வசம் வைத்துள்ள பிரித்தானியா. நினைத்த நேரத்தில் உலகில் எந்த ஒரு கம்பெனியோடும் டீல் பேசி முடிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. அந்த வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில்(பெல்ஜியத்தில்) இயங்கி வரும் பைசஃர் கம்பெனி. பெல்ஜியம் நாட்டிற்கு முதலில் தடுப்பு மருந்தை கொடுக்கவில்லை. மாறாக பிரித்தானியாவுக்கு தான் ஏற்றுமதி செய்தது. இதில் இருந்தே நாம் புரிந்து கொண்டிக்கவேண்டும்.

எங்கே-எல்லாம் தரமான தடுப்பூசிகள் உள்ளதோ, அந்த கம்பெனிகளை அணுகி உடனே டீலை முடித்து 5 மில்லியன் 10 மில்லியன் என்று தடுப்பூசிகளை வாங்கி குவித்து வருகிறது பிரித்தானியா. இதனால் ஏனைய நாடுகள் கடும் அதிருப்த்தி அடைந்து வருகிறது. உதாரணமாக நார்வே நாடு தனது நாட்டில் 80,000 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் தடுப்பூசிகளை வழங்கி உள்ளது.

ஆனால் பிரிட்டன் 8 மில்லியன் பேருக்கு இதுவரை தடுப்பூசிகளை வழங்கி விட்டது. அது போக அனைத்து, ஐரோப்பிய நாடுகளையும் விட, பிரிட்டனே பல மடங்கு முன் நிலை வகிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் என்று தங்களை பெருமையோடு பேசிக்கொள்ளும் இந்த நாடுகளால் ஒரு ஒப்பந்தத்தை கூட சரியாக முடித்து, தடுப்பு மருந்துகளை பெற முடியவில்லை என்பது தான் உண்மை நிலையாகும்.

Contact Us