டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்து சிதறியது: பெரும் பதற்றம் !

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்ததில் மூன்று கார்கள் சேதமடைந்துள்ளன.நகரின் மையப் பகுதியில் உள்ள ஓரங்கசீப் (Aurangzeb) வீதியின் ஓரத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக டெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பு, மாலை ஐந்து மணியளவில் இடத்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்புப் படை, ஸ்வாட் மற்றும் தடயவியல் குழுக்கள் விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாகவும் எந்த வகையான பொருள் வெடித்தது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குண்டு வெடிப்பில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Contact Us