விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியவர்கள் மீண்டும் உதவுகிறார்களாம்!

இறுதிக் கட்டப் போரின் போது இந்தியாவுடனான நெருங்கிய உறவு விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியது என இலங்கையால் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, நினைவு கூர்ந்தார்.

இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளைப் பயன்படுத்தி கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இலங்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.

இந்நிலையில், இந்த நிகழ்வில் கருத்துக்கூறிய அவர், இரு தரப்பினரும் (இந்தியா-இலங்கை) ஒரே பக்கத்தில் இருப்பதை விவாதங்கள் உறுதி செய்துள்ளன என்று குறிப்பிட்டார்.

அத்துடன், வெல்ல முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா தங்களுக்கு உதவியது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கொரோனா வைரஸுக்கு எதிரான போரை வெல்லவும் இலங்கைக்கு இந்தியா இப்போது உதவுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதிசெய்ய பெரிய அளவில் உதவியதாக வீரதுங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us