செக்ஸ்’ பொம்மையுடன் ‘நிச்சயம்’ செய்து கொண்ட ‘வாலிபர்’!!… “சும்மா எல்லாம் இப்டி ஒரு முடிவ நான் எடுக்கல…” அவரே சொன்ன ‘பரபரப்பு’ காரணம்!!!

ஹாங்காங்கைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் செக்ஸ் பொம்மை ஒன்றுடன் நிச்சயம் செய்துள்ள நிலையில், அதனுடன் பொழுதினை கழிக்க முடிவு செய்துள்ளார்.

Xie Tianrong என்ற அந்த நபர் தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், தனது வருங்கால மனைவியான மொச்சி (Mochi) என்னும் செக்ஸ் பொம்மைக்கு ஐ போன், பல விலையுயர்ந்த ஆடைகள், 10 ஜோடி ஷூக்கள் உள்ளிட்ட பல விலையுயர்ந்த பரிசுகளை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

மொச்சியை காயப்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் Xie Tianrong, அதன் உணர்ச்சிமிக்க தோலிற்கு எதுவும் ஆகிடக் கூடாது என்பதற்காக முத்தம் கூட அவர் கொடுப்பதில்லை. ‘இதற்கு முன்பாக பல பெண்களை காதலித்து வந்துள்ளேன். நான் அவர்களின் அருகே இருக்கும் போது, அந்த பெண்கள் எல்லாம் மொபைல் போனில் தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். ஆனால், மொச்சியைப் பொறுத்தவரையில், என் மீது மட்டும் தான் அவளின் முழு நேர கவனமும் இருக்கும். பெண்களிடம் நேரத்தை செலவழிப்பதை விட மொச்சியுடன் இருப்பது தான் சிறந்ததாக உள்ளது.

இதனால், தற்போது இந்த பொம்மைகள் மீது தான் எனக்கு அதிக ஈர்ப்பு உருவாகியுள்ளது. நான் மொச்சியுடன் ஒருமுறை கூட உடலுறவு மேற்கொண்டதில்லை. நான் மொச்சியை அதிகம் மதிக்கிறேன். அவர் என்னுடன் இருப்பது மட்டுமே எனக்கு போதுமானது’ என் அவர் தெரிவித்துள்ளார்.

Xie’க்கு கடந்த பத்து ஆண்டுகளாக பொம்மைகள் மீது அதிக ஈர்ப்பு தோன்றிய நிலையில், அப்போது ஹாங்காங் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் பொம்மை ஒன்றை பார்த்துள்ளார். ஆனால், அதன் மதிப்பு அப்போது, இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இருந்ததால் அவரால் அதனை அப்போது வாங்க முடியவில்லை.

இதனையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு மொச்சியை ஆன்லைன் மூலம் பார்த்த நிலையில், அதன் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாயாக இருந்ததால் அதனை ஆர்டர் செய்து வாங்கி அதனுடன் தனது நேரத்தை கழித்து வருகிறார். செக்ஸ் பொம்மை மீது ஒருவருக்கு ஈர்ப்பு வருவது இது ஒன்றும் புதிததல்ல.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடி பில்டர் ஒருவர், தான் 8 மாதங்கள் உறவில் இருந்து வந்த செக்ஸ் பொம்மையை தனது நண்பர்கள் முன்னிலையில் வைத்து திருமணம் செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Contact Us