சன் டிவி சீரியல் நடிகைக்கு படப்பிடிப்பில் நெஞ்சுவலி; அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சன் டிவி சீரியல் நடிகை ஒருவருக்கு படப்பிடிப்பில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக செளந்திரவள்ளி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தெலுங்கு நடிகை ஆமனி.

மேலும் தெலுங்கு திரைப்படங்களில் கேரக்டர் வேடங்களில் நடித்துள்ள அவருக்கு தற்போது 47 வயதாகிறது. இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த சில நாட்களாக தனது அடுத்தப் படத்திற்காக படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். தெலுங்கானா நகரின் அருகிலுள்ள இடங்களில் அந்தப் படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது.

 

எனினும் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற ஆமனிக்கு பரிசோதனைக்கு பின்னர், கவலைப்பட தேவையில்லாத லேசான நெஞ்சு வலி என்று மருத்துவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு முதலுதவிக்கு பின்னர், ஆமனி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மேலும் தெலுங்கு படமான ‘ஜம்ப லக்கிடி பாம்பா’ படத்தில் நரேஷுக்கு ஜோடியாக ஆமனி அறிமுகமானார். இதையடுத்து, அக்கினேனி நாகார்ஜுனா, நந்தமுரி பாலகிருஷ்ணா, கிருஷ்ணா, ஜகபதி பாபு மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Contact Us