60 கி.மீ வேகத்தில் பறந்த வேன்’!.. ஆமா டிரைவர் என்ன பண்றாரு..? விரட்டிச் சென்று செல்போனில் வீடியோ எடுத்த நபர்கள்..!

வேனை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேஸ்புக் பார்த்துக்கொண்டு சென்ற டிரைவரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த சிமியோன் ஹாட்டன் (Simeon Haughton) தனது தொழில் பாட்னர் லியாம் ரட்ஜ் (Liam Rudge) உடன் செஸ்டர் நகருக்கு காரில் சென்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களது காரை சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் வேன் ஒன்று கடந்து சென்றுள்ளது. அதில், டிரைவர் ஒரு கையில் வேன் ஸ்டரிங்கை பிடித்துக்கொண்டு, மறுகையில் போன் பயன்படுத்தி வந்ததை அவர்கள் கவனித்துள்ளனர்.

உடனே அந்த வேனை வேகமாக பின்தொடர்ந்து சென்று, தனது செல்போனில் சிமியோன் ஹாட்டன் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது பெண் டிரைவர் ஒருவர் செல்போன் பயன்படுத்திக் கொண்டே வேனை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது. சிமியோன் ஹாட்டன் செல்போனில் வீடியோ எடுப்பதைப் பார்த்த அப்பெண் உடனே, தனது கையால் முகத்தை மறைத்துள்ளார்.

இதனை அடுத்து இந்த வீடியோவை சிமியோன் ஹாட்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேன் டிரைவரின் இந்த செயலைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்யவே, வீடியோ வைரலாகி உள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பெண் டிரைவர் அப்போது செல்போனில் பேஸ்புக் பார்த்துக்கொண்டிருந்ததாக சிமியோன் ஹாட்டன் தெரிவித்துள்ளார்.