ரஜினியை பொதுமேடையில் படுமோசமாக திட்டிய மனோரமா.. பதிலுக்கு கூப்பிட்டு உதவி செய்த சூப்பர் ஸ்டார்

ஆச்சி மனோரமா தமிழ் சினிமாவில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை 1000 படங்களுக்கு மேல் நடித்து சரித்திரம் படைத்த நாயகியாக வலம் வந்தார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் மனோரமாவை அடித்துக் கொள்ள ஆளில்லை.

இன்று மனோரமா போல் ஒரு நடிகை கிடையாது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். மேலும் மனோரமாவை பலரும் தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் விசாலமாக பரவி இருந்தார்.

அப்படிப்பட்ட மனோரமா ரஜினியை இவ்வளவு தரக்குறைவாக பேசியுள்ளார் என்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோரமா நடிகை மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியை சேர்ந்தவராம்.

படையப்பா படத்தின் போது ரஜினி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அந்த சமயம் ஜெயலலிதா ஆட்சி கவிழ காரணமாக இருந்தவரே ரஜினிகாந்த் தான். ரஜினி சொன்ன ஒற்றை வார்த்தைக்காக மொத்த ஓட்டும் வேறுபக்கம் விழுந்தது.

அப்போதைய பிரச்சார பேட்டியில் தான் ஒரு மேடையில் மனோரமா ரஜினியை மிகவும் தரக்குறைவாக மோசமாக பேசியுள்ளார். அதன் பிறகு சில வருடங்கள் தமிழ் சினிமாவால் மனோரமா புறக்கணிக்கப்பட்டாராம். தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் தர தயாரிப்பாளர்கள் மறுத்து விட்டார்களாம்.

இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனோரமா தன்னை தவறாக பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாமல் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க உதவி செய்தாராம். அதன்பிறகு மனோரமா இப்படிப்பட்ட மனிதனை தவறாக பேசி விட்டோமே என குற்ற உணர்ச்சியில் இருந்ததாக கூறுகின்றனர்.