பிரிட்டன் கடலில் களவாக நுளைந்த ரஷ்ய நீர்மூழ்கி நாசகாரி- திடீரென கண்டு பிடித்ததால் பதற்றம் !

பிரித்தானியாவின் வடக்கு கடல் கரையில், ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த கடல்படை கப்பலான HMஸ் மேர்சிக்கு திடீர் அதிர்ச்சி ஒன்று தோன்றியது. சில நூறு மீட்டர் தொலைவில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் செல்வதை அவர்கள் திடீரென அவதானித்தார்கள். மேலும் சொல்லப் போனால் சோனார் கருவிகள் கூட குறித்த நீர்மூழ்கியைக் காட்டவில்லை. இன் நிலையில் இது தமது நாட்டுக் கப்பலா இல்லை வேறு நாட்டுக் கப்பலா என்ற குழப்பம் தோன்றியது.

ஆனால் சடுதியாக அது ரஷ்ய நாசகாரி நீர்மூழ்கிக் கப்பல் என்று பிரித்தானிய கடல்படையினர் அறிந்து கொண்டார்கள். மேலும் சொல்லப் போனால் அது முற்று முழுதாக பிரித்தானிய கடல் எல்லைக்குள் சென்று கொண்டு இருந்துள்ளது. இதனால் அலேட் ஆன கடல்படையினர் அதன் அருகே சென்று அங்கிருந்து சர்வதேச கடல் எல்லைக்கு செல்லுமாறு கட்டளை பிறப்பித்தார்கள். இதனை அடுத்தே குறித்த ரஷ்ய நாசகாரி கப்பல் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளது என்று பிரித்தானிய கடல்படையினர் அறிவித்துள்ளார்கள்.