ஸ்ரீலங்கா நாயே… என்று ஈழத்து தமிழ் பெண்ணை திட்டிய ஆரியாவின் அம்மா: 80 லட்சத்தை ஆட்டையை போட்டது எப்படி ?

கொரோனா காலகட்டம் என்பதால் எனக்கு படம் எதுவும் இல்லை. உண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறி, ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து தமிழ் பெண்ணிடம் 80 லட்சம் ரூபாவை பெற்றுள்ளார் ஆரியா. ஆனால் பல பெண்களை இது போல ஆரியா ஏமாற்றியுள்ளார் என்று அறிந்த ஈழத்து விட்ஜெயா என்னும் பெண், பணத்தை திருப்பி கேட்ட வேளை, ஸ்ரீலங்கா நாயே , ஏண்டி என் மகனை கரைச்சல் படுத்துகிறாய் என்று ஆரியாவின் அம்மா மிகவும் கேவலமாக விஜெயாவை திட்டியுள்ளார்.

ஜேர்மனியில் சுகாதார துறையில் வேலை பார்க்கும் விட்ஜேயா என்னும் ஈழத்து பெண்ணையே ஆரியா இவ்வாறு ஏமாற்றியுள்ளார். ஆர்யா தற்போது திருமணம் செய்து கொண்டு விட்டார். பணத்தை திருப்பிக் கேட்டால், நான் தற்கொலை செய்வேன். என் சாவுக்கு நீ தான் காரணம் என்று கூறி, இளகிய மனம் கொண்ட அந்த ஈழத்து பெண்ணை மிரட்டியுள்ளார் ஆர்யா. இது பல மாதங்களாக நீடித்துள்ள நிலையில்.

கடைசியாக ஈழத்து பெண் விட்ஜெயா தற்போது முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இதனூடாகவே ஆரியாவின் வண்டவாளம் ஊருக்கு தெரிந்துள்ளது.  இந்த தகவலை அறிந்த அவரது மனைவி ஆயிஷா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுமார் 15 பெண்களோடு ஆரியாவுக்கு தொடர்பு இருக்கிறது என்று அவரது மனைவி, தலை வலியில் உள்ள நிலையில்.

இந்த 80 லட்சம் பிரச்சனை தோன்றியுள்ளது. குறித்த 15 பெண்களில் ஆரியா 7 பெண்களிடம் இது போல பணத்தைப் பெற்றுள்ளார் என்ற பரபரப்பு விடையமும் வெளியாகியுள்ளது, ஆனால் அந்தப் பெண்கள் எவரும் பொலிஸ் முறைப்பாடு செய்யவில்லை. பணம் போனால் போகட்டும் என்று விட்டு விட்டார்கள்.

விட்ஜெயா இந்திய பிரதமரின் உள்துறை அலுவலகம் ஊடாக இந்த முறைப்பாட்டை செய்திருப்பது மேலும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. இதனை மத்திய பொலிஸார் விசாரணை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.