இலங்கை முழுவதும் சுற்றிவளைப்பு; 3,871 பேர் கைது; நடந்தது என்ன?

நாடளாவிய ரீதியில் 4 மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பில் 3,871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 607பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 146 பேர் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டார்.