கொஞ்சம் ஸ்வீட் எடு, கொண்டாடு’… ‘சற்று நிம்மதி கொடுத்த தங்க விலை’…

தங்க விலை கடந்த வாரம் முதல் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழே வந்த நிலையில் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் மீண்டும் தங்கம் பவுன் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது.

இதனிடையே கடந்த 24-ந்தேதி முதல் விலை குறைந்தது. மறுநாள் தங்கம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.34 ஆயிரத்து 904க்கு விற்றது. இந்த நிலையில் இன்று 4-வது நாளாக விலை குறைந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 குறைந்து ரூ.34 ஆயிரத்து 648-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரு.4 ஆயிரத்து 331 ஆக உள்ளது. வெள்ளி விலையைப் பொறுத்தவரைக் கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.72 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்கிறது.

தங்க விலையைப் பொறுத்தவரைப் பவுனுக்கு 4 நாட்களில் ரூ.664 குறைந்துள்ளது. இது நடுத்தர மக்களிடையே சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.