உருவத்தை விட மனசு பெருசுங்க’!.. ‘அதுகிட்ட இருந்து நம்மெல்லாம் கத்துக்கணும்’.. சிலிர்க்க வைத்த யானையின் செயல்..!

சாலையில் பாகன் அழைத்துச் செல்லும்போது யானை செய்த செயல் இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

நெட்டிசன் ஒருவர் வீடியோ ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், பாகன் ஒருவர் யானையை சாலையில் அழைத்துச் செல்கிறார். அப்போது சாலையில் நாய் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளது. இதைப் பார்த்த சுதாரித்த யானை, அதை மிதிக்காமல் சிறிது தூரம் விலகிச் சென்றது.

இதனைத் தொடர்ந்து வந்த கார் ஒன்று, இறந்து கிடந்த நாய்க்கு நடுவே வேகமாக சென்றது. யானை எவ்வளது மதிநுட்பத்துடனும், நாகரீகத்துடன் நடந்து கொண்டது என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.