திருப்பூர் மாவட்டம் கூலிப்பாளையத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை, பெயர்த்தெடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை நிகழ்த்திய முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம்-க்கு நள்ளிரவில் வந்த முகமூடி அணிந்து வந்த 4 திருடர்கள், ஏ.டி.எம். மெஷினை வாகனம் மூலம் கயிறு கட்டி இழுத்து பெயர்த்தெடுத்து சென்றுள்ளனர்.
காலை நேரத்தில் அப்பகுதி மக்கள் இதைக்கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை கொள்ளையர்கள் விஜயமங்கலம் என்ற பகுதியில் விட்டுவிட்டு, ஏ.டி.எம். இயந்திரத்தை மட்டும் மற்றொரு வாகனத்தில் எடுத்துச் சென்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.