அடிக்கடி பசி ஏற்படுவதை நிறுத்த இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!

உடல் எடையை குறைப்பதற்கும் பராமரிப்பதற்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பசியை சமாளிப்பது. பசி என்பது உடலியல் மற்றும் உடலியல் செயல்பாடுகளின் விளைவாகும். உணவை ரசித்து உண்பது வேறு. தேடிச் சுவைப்பது என்பதும் வேறு. ஆனால், சில நேரங்களில் உணவை உண்டே ஆக வேண்டும் என்ற கட்டாய உணர்வு ஏற்படும். இது கவனிக்க வேண்டிய ஒன்று. அதிலும் எடை குறைப்பு போன்ற முயற்சியில் இருக்கும்போது இந்த உணவு வெறி நம்மை படுத்தி எடுக்கும். இந்த நிலையை கையாண்டு வெற்றி பெறுவது எப்படி போன்ற கேள்விகளுக்கு இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

பசியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்:

வேகமாக மாறிவரும் காலநிலையில் நம்மில் பலரும் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் தேவையற்ற சிக்கல்கள் அதிகரித்து உடல் பெருக்கம் ஏற்பட்டு நம்மை சிக்கலுக்குள் தள்ளி விடுகிறது. எப்பொழுதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தவறு அளவுக்கு குறைவாக சாப்பிடுவதும் தவறு. தினமும் ஒரே நேரத்தில் உணவு உண்பது சிறந்தது காலை உணவு என்றால் காலை 8 மணியிலிருந்து 10 மணி வரைக்குள்ளும் மதிய உணவு என்றால் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளும் இரவு உணவிற்கு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் சாப்பிடுவது நல்லது.

நீங்கள் பசியாக இருக்கும்போது சாப்பிட வேண்டாம்:

பயங்கர பசி இருக்கும்போது குறைந்தது 10-20 நிமிடங்கள் காத்திருங்கள். பசி அதிகம் இருக்கும்போது நீங்கள் சாப்பிட்டால் உங்களால் குறைவாகவே சாப்பிடமுடியும். இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்காது.

மெதுவாக சாப்பிடுங்கள்:

சாப்பிடும் போது உணவை நன்றாக சிறிது சிறிதாக கடித்து மென்று சாப்பிடுங்கள். நீங்கள் உண்ணும் அறையிலோ அல்லது சூழலிலோ கட்டுப்பாடுகளை விதிக்கவும். இது உண்ணும் செயல்முறையிலிருந்து உங்களை திசைதிருப்பக்கூடாது. போன்கள், டிவிகள் மற்றும் கேஜெட்களை உணவின் போது ஒதுக்கி வைக்கவும். கடைசியாக உணவை கடித்து மென்று விழுங்கிய பிறகே மற்றொரு கடி உணவை வாயில் வையுங்கள். மெதுவாக சாப்பிடும்போது உங்களால் குறைவாக சாப்பிடமுடியும்.

தண்ணீர் குடியுங்கள்:

உணவு உண்ணுவதற்கு முன் அதிக தண்ணீரை குடியுங்கள். அப்படி செய்தால் உங்களால் அதிகம் சாப்பிட முடியாது. நீர் உங்கள் வயிற்றை முழுமையாக வைத்திருக்கும். முடிந்த அளவு நீராகாரங்களை உண்ணுங்கள். நீராகாரங்கள் விரைவில் ஜீரணமாகும் உடல் எடையை கூட்டாது.

காலை உணவை தவிர்க்காதீர்கள்:

காலை உணவு என்பது நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் எல்லாம் காலை உணவில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. எனவே எழுந்த 3 மணி நேரத்தில் காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொள்ளும்.

செயற்கை பானங்களுக்கு குட் பை சொல்லுங்கள்:

இப்பொழுது எல்லாம் கார்பனேட்டேடு பானங்களை குடிப்பது பேஷனாகி வருகிறது. இவற்றில் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை உங்க கொழுப்பை அதிகரிக்க மட்டுமே உதவுகிறது. இதற்கு பதிலாக க்ரீன் டீ, ஜூஸ்கள் போன்ற இயற்கை பானங்களை குடியுங்கள்.

நொறுக்கு தீனிகளை நிறுத்துங்கள்:

அடிக்கடி பசிக்குது பசிக்குது என்று நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதும் உங்க தொப்பை அதிகரிக்க ஒரு காரணமாகிறது. எனவே நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை குறையுங்கள். உங்களை கட்டுப்பாட்டில் வைக்க முற்படுங்கள். வாரத்திற்கு ஒரு முறை மட்டும் க்ரீமி பாஸ்தா, சாக்லேட் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்க உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கும். நொறுக்கு தீனிகளை ஒருமுறை சாப்பிட்டால் அது உங்களை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும். எனவே நொறுக்கு தீனிகளுக்கு முழுக்கு போடுங்கள்.