ஈழத்தில் உள்ள தமிழ் உறவுகளின் வாழ்வை மாற்ற இங்கிலாந்தில் இதை செய்யுங்கள்!

தமிழர்களிற்கு தனிநாடு கோரி பல ஆண்டுகளாக பல உயிர்களை இழந்து, அவயங்களை இழந்து கொள்கை தளராது போராடி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த 2009 ஆண்டு வல்லரசு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் ஒத்துழைப்புடன் ராஜபக்ச குடும்பத்தின் பல போர் விதி மீறல்களுக்கு மத்தியில் மௌனித்தது.

அதன் பின்னர் ஈழத்தில் அவயங்களை இழந்த பல முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் மக்கள் பல வேதனைகளுடன் வறுமையும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலைமையை மாற்ற, ஈழத்தில் இருக்கும் எமது உறவுகளின் கல்வி தரம் மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புலம்பெயர் வாழ் ஈழத்து உறவுகள் பல உதவிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து வாழ் ஈழத்து புலம்பெயர் மக்களும், ஈழத்தில் வறுமையில் வசிக்கும் எமது உறவுகளுக்கு உதவ தயங்கியதில்லை.

அந்த வகையில் லண்டனில் வசிக்கும் , ஈழ விடுதலைக்காக போராடி மடிந்த மாவீரரின் சகோதரரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த சதானந்தன் தேவ்நாத் அவர்கள், ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வறுமை கோட்டிற்குட்பட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தனது சொந்த நிதியிலிருந்து முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் வீதியில் கவி கோல் சேல் லிமிட்டட் என்னும் பெயரில் தொழிற்சாலையொன்றை அமைத்து போரினால் அவயங்களையிழந்த முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலருக்கு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளார், தொடர்ந்து அந்நிறுவனத்தை விரிவுபடுத்தி மேலும் பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டிருக்கிறார், அத்துடன் நின்று விடாமல் அந்த கைத்தொழிற்சாலையில் ஈழத்து உறவுகளால் உருவாக்கப்படும் ஆரோக்கியமான கைத்தொழில் பொருட்களை தாயகத்திலிருந்து இங்கிலாந்திற்கு இறக்குமதி செய்து இங்குள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளூடாக விற்பனையை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் இங்கிலாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் விற்பனையாகும் கவி கோல் சேல் லிமிட்டட் நிறுவனத்தின் பொருட்களுடாக வரும் லாபத்தில் இரண்டு வீதத்தினை, மீளவும் தாயகத்திற்கு அனுப்பி அவரது கவி உதவும் கரங்களென்ற தொண்டு நிறுவனமூடாக ஈழத்தில் வறுமையில் வாடும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஈழத்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கிலே பல உதவிகளை செய்து, அதனை அனைவரும் பார்க்கும் வகையில் சமூக வலைத்தளங்களுடாக பகிரங்கப்படுத்தி வருகிறார்.

இங்கிலாந்து வாழ் மக்களே, தாயக சுவையடன் உங்களுக்கு தேவையான ஆரோக்கியமான பொருட்களை இங்கிலாந்தில் பெறுவதுடன், நீங்கள் வாங்கும் இந்த நிறுவனத்தின் பொருட்களூடாக தாயகத்தில் தமிழர்களுக்காக போராடி இன்று அவயங்களை இழந்து வறுமையில் தவிக்கும் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த உதவ முடியும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவதோடு, ஈழத்தில் வாழும் எமது உறவுகளின் நிலையை மாற்ற நீங்கள் வாங்கும் இந்த நிறுவனத்தின் பொருட்கள் உதவுமெனவும் தெரிவிக்கின்றார்கள் கவி கோல் சேல் லிமிட்டட் நிறுவனத்தினர்.

இங்கிலாந்தில் சமீபத்தில் நீங்கள் வாங்கிய பொருட்களுடாக வந்த இரண்டு வீத லாபத்தில் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட உதவிகளின் புகைப்படத்தொகுப்பு சில..