இனி சிகரெட் துண்டை காரில் இருந்து எறிந்தால் கூட, £120 பவுண்டுகள் தண்டம்- புது கமரா தமிழர்களே…

சுத்தமான பிரித்தானியா என்ற ஒரு புது திட்டத்தை களம் இறகுகிறது பிரித்தானிய அரசு. இதன் ஒரு அங்கமாக நாட்டில் உள்ள பல வீதிகளில் புது வகையான CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுக் கொண்டு வருகிறது. இவை வேகத்திற்காக அல்ல. காரில் இருந்து யாரவது ஏதாவது ஒரு பொருளை தூக்கி றோட்டில் எறிந்தால் போதும். உடனே கார் உரிமையாளருக்கு 120 பவுண்டுகள் தண்டப் பண டிக்கெட் தானாக வீடு தேடி வரும்.

இந்த CCTV கமராக்கள் மிகவும் சக்த்திவாய்ந்தவை. சிகரெட் குடித்துவிட்டு அந்த சின்ன துண்டை போட்டால் கூட அது துல்லியமாக படம் எடுத்துவிடும் திறன் கொண்டவை. இதனால் அந்த கமராவை ஏமாற்ற முடியாது. தண்டப் பணத்தை நிச்சயம் கார் உரிமையாளர் கட்டியே தீரவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. Source GOV: Motorists will be hit by new £120 fines if they are caught on camera throwing even a cigarette butt or apple core out of their windows in new anti-litter scheme.