யாழில் பயங்கரம்; தந்தையை தாக்கி கொலை செய்த மகன்!

மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு நிலாவரை புத்தூர் – இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார்.

தாக்குதலுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அச்சுவேலி பொலிஸார், தாக்குதல் நடத்தியவரைத் தேடி வருகின்றனர்.