நீங்கள் மெளனமாக இருந்தீர்களா ? இல்லை மெளனம் ஆக்கப்பட்டீர்களா ? குட்டியை கிளறும் ஓப்பிறா !

அமெரிக்காவில் நடைபெறும் றியாலிட்டி ஷோக்களில் மிக பிரபல்யமானது, ஓப்பறா என்ற கறுப்பின பெண் நடத்தும் நிகழ்ச்சி தான். பல மில்லியன் பார்வையாளர்கள் இந்த நிகழ்சிக்கு அடிமை என்று சொல்லலாம். அந்த வகையில் CBS தொலைக்காட்சி நிகழ்சிக்காக, பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மெகான் ஆகியோர் இன் நிகழ்சியில் கலந்து கொள்கிறார்கள். பிரித்தானிய ராச குடும்பத்தில் இருந்து ஹரி-மெகான் தம்பதிகள் ஏன் ஒதுங்கினார்கள் ? என்ற பெரும் கேள்வி உள்ளது.

இதுவரை அதற்கான சரியான பதிலை அவர்கள் வழங்கவில்லை. இன் நிலையில் நீயா…. நானா கோபிநாத் போல பிரச்சனைகளை உள்ளே சென்று அலசி ஆராயும் ஓப்பறாவிடம் இவர்கள் சிக்கியுள்ளார்கள். முதல் நாள் புரோமோவில் வைத்தே, இவர்கள் இருவருக்கும் ஒரு காட்டு காட்டியுள்ளார் ஓப்பறா. தனது முழு நிகழ்சியில் மேலும் அதிர்ச்சி தரும் விடையங்கள் பல வெளிவர உள்ளதாக ஓப்பிறா தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரச குடும்பத்தின் நடத்தையை தாக்கி இன் நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.

எப்படி என்றாலும் ஒரு கட்டத்தில் கடும் நெருக்கடி ஒன்றை கொடுத்து அவர்களை உடைத்து உண்மையை வெளியே எடுப்பதில் கெட்டிக்காரி ஓப்பறா. சிக்கி தவிக்கப் போகிறார்கள் இந்த தம்பதிகள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.